திருப்பதி தேவஸ்தானத்திற்கு மின்சார பேருந்துகள் நன்கொடை..!
திருப்பதி தேவஸ்தானத்திற்கு மின்சார பேருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
திருப்பதி,
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், கிழக்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது திருப்பதி. இந்த நகரத்தை ஒட்டியுள்ள திருவேங்கட மலையின் மீதுதான் ஏழுமலையான் கோவில் கொண்டிருக்கிறான். இந்த கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் தினமும் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறன்னர்.
இந்த நிலையில், 18 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்து மின்சார பேருந்துகள், திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. ஐதராபாத்தில் ஒலக்ட்ரா என்ற பெயரில் மின்சார பேருந்துகளை உற்பத்தி செய்யும் மெகா இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் நிறுவனம், இந்த பேருந்துகளை வழங்கியுள்ளது.
மின்சார பேருந்துகளை இயக்குவதற்கு தேவையான பயிற்சியை தேவஸ்தான ஓட்டுனர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதன் பின், இன்னும் பத்து நாட்களில்10 பேருந்துகளும், திருப்பதி மலையில் பக்தர்களின் இலவச போக்குவரத்திற்காக பயன்பாட்டிற்கு வரப்பட உள்ளன.