கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் கண்கள் தானம்


கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் கண்கள் தானம்
x
தினத்தந்தி 30 Sept 2022 12:30 AM IST (Updated: 30 Sept 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் கண்கள் தானம் செய்யப்பட்டது.

சிவமொக்கா;


சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தாலுகா தரலகட்டா தாண்டா பகுதியை சேர்ந்தவர் ஜெயா நாயக்(வயது 46). விவசாயியான இவருக்கு அந்த பகுதியில் சொந்தமாக விளைநிலம் உள்ளது. அதில் அவர் மக்காச்சோளம் பயிரிட்டு விவசாயம் செய்து வந்தார். இதற்காக அவர் வங்கி மற்றும் விவசாய சங்கத்தில் ரூ.8 லட்சம் வரை கடன் வாங்கி இருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழைக்கு மக்காச்சோள பயிர்கள் அனைத்தும் நீரில் முழ்கி நாசமானது. இதனால் அவருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி தருமாறு கேட்டு வந்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த அவர் தனது சித்தப்பாவின் தோட்டத்தில் இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிகாரிப்புரா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் ரசிகரான ஜெயா நாயக் தன்னுடைய கண்களை தானம் செய்ய வேண்டும் என்று குடும்பத்தினரிடம் கூறியிருந்தார். அதன்படி அவரது கண்கள் சங்கரா நேத்ராலயா மருத்துவமனைக்கு தானமாக கொடுக்கப்பட்டது.


Next Story