உள்நாட்டு விமானங்களில் ஒரே நாளில் 4.56 லட்சம் பேர் பயணம் - மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல்
உள்நாட்டு விமான பயணங்களில் 4.56 லட்சம் பேர் பயணித்ததாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
கொரோனா ஊரடங்கு முடிவடைந்த பின்னர் உள்நாட்டு விமான போக்குவரத்து மற்றும் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் 30-ந்தேதி மொத்தம் 2,978 உள்நாட்டு விமான பயணங்களில் 4,56,082 பேர் பயணம் செய்ததாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா காலகட்டத்திற்கு முந்தையை தினசரி விமான பயணிகளின் அளவை இது தாண்டியுள்ளது. அதே சமயம் ஏப்ரல் 30-ந்தேதி வெளிநாட்டு விமான பயணங்களையும் சேர்த்து மொத்தம் 9,13,336 பேர் பயணம் செய்துள்ளனர். விரைவில் தினசரி உள்நாட்டு விமான பயணங்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டும் என துறை சார் நிபுணர்கள் கூறுகின்றனர்.
Related Tags :
Next Story