ஜார்க்கண்ட் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் தகுதிநீக்கம் - சபாநாயகர் நடவடிக்கை


ஜார்க்கண்ட் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் தகுதிநீக்கம் - சபாநாயகர் நடவடிக்கை
x

ஜார்க்கண்டில் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த ஹேமந்த் சோரன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு முதல்-அமைச்சராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த ஹேமந்த் சோரன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் லாபின் ஹெம்ப்ரோம் கட்சிக்கு எதிரான நடவடிக்கையிலும் மற்றும் பா.ஜனதா கட்சியை சேர்ந்த ஜெய்பிரகாஷ் பாய் படேல் எம்எல்ஏ காங்கிரஸ் கட்சிக்கும் தாவினர். இதையடுத்து லாபின் ஹெம்ப்ரோம் மற்றும் ஜெய்பிரகாஷ் பாய் படேலுக்கு எதிராக கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு பாஜனதா மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் முறையிட்டன.

இந்த நிலையில், 2 பேரையும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரபீந்திரநாத் மஹோட்டா உத்தரவிட்டார். ஜார்க்கண்ட் மாநில சட்டசபை இன்று (வெள்ளிக்கிழமை) கூடும் நிலையில் மேற்கண்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ஹெம்ப்ரோம் ராஜ்மகால் தொகுயில் சுயேச்சையாகவும், ஜெய்பிரகாஷ் பாய் படேல் ஹசாரிபாக் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story