நாடாளுமன்ற கேன்டீனில் சிறுதானிய உணவு பண்டங்கள்
நாடாளுமன்ற கேன்டீனில் சிறுதானிய உணவு பண்டங்களை சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
மத்திய அரசின் சிபாரிசால், இந்த ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது. சிறுதானியங்களின் பலன்கள் குறித்து பிரதமர் மோடி தனது 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் எடுத்துரைத்துள்ளார்.
இந்த பின்னணியில், நாடாளுமன்ற கேன்டீனில் சிறுதானியங்களால் செய்யப்பட்ட உணவு பண்டங்களை சேர்க்க சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, ஓட்ஸ் பால் அல்லது சோயா பால், தினை உணவுகள், கேழ்வரகு சூப், சாம்பாருடன் கேழ்வரகு ரவை இட்லி, கேழ்வரகு வால்நட் லட்டு, கேரள உணவான கேழ்வரகு தோசை, வேர்க்கடலை சட்னி, சிறுதானிய சாலட் உள்ளிட்ட உணவு பண்டங்கள் கிடைக்கும்.
எம்.பி.க்கள், ஊழியர்கள், பார்வையாளர்கள் என பலதரப்பினரும் அவற்றை சாப்பிடலாம். அத்துடன், வழக்கமான உணவு வகைகளும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story