கொல்கத்தா போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர் மீது ஒழுங்கு நடவடிக்கை-மத்திய அரசு அதிரடி


கொல்கத்தா போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர் மீது ஒழுங்கு நடவடிக்கை-மத்திய அரசு அதிரடி
x

கொல்கத்தா போலீஸ் கமிஷனர் மற்றும் துணை கமிஷனருக்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநில கவர்னர் ஆனந்தபோஸ், கடந்த மாதம் மத்திய உள்துறை மந்திரியிடம் ஒரு அறிக்கை சமர்ப்பித்தார். அதில், கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல், துணை கமிஷனர் இந்திரா முகர்ஜி ஆகியோர் பொது ஊழியர்களுக்கு பொருத்தமற்ற வகையில் செயல்படுவதாகவும், தேர்தல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை தன்னை சந்திக்க விடாமல் தடுத்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த அறிக்கை அடிப்படையில், கொல்கத்தா போலீஸ் கமிஷனர் மற்றும் துணை கமிஷனருக்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.கவர்னர் பதவியை களங்கப்படுத்தும் வகையில், இருவரும் வதந்திகளை பரப்பியதாகவும், ஊக்குவித்ததாகவும் மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மாநில அரசுக்கும் கடிதம் மூலம் இத்தகவல் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.


Next Story