மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிடுக - சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு மேலும் ஒரு ரிட் மனு தாக்கல்
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிடக்கோரி மேலும் ஒரு ரிட் மனுவை சுப்ரீம் கோர்ட்டில் கேரளா அரசு தாக்கல் செய்துள்ளது.
புதுடெல்லி,
கேரளா கவர்னர் ஆரிப் முகமது கான் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்வதாக கேரள அரசு குற்றம் சாட்டியது.
இது தொடர்பாக கேரளா அரசு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 1-ந்தேதி தாக்கல் செய்த ரிட் மனுவில் பல்கலைக்கழக திருத்த மசோதா உள்ளிட்ட 8 மசோதாக்கள் கவர்னரிடம் பல மாதங்களாக நிலுவையில் உள்ளதாகவும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கவர்னர் காலதாமதம் செய்து வருவதாகவும் குற்றம் சாட்டியது.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ரிட் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிடக்கோரி மேலும் ஒரு ரிட் மனு கேரளா அரசு சார்பில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story