டெல்லிக்குள் டீசல் பஸ்கள் நுழைவதற்கு இன்று முதல் தடை; அரசு முடிவு


டெல்லிக்குள் டீசல் பஸ்கள் நுழைவதற்கு இன்று முதல் தடை; அரசு முடிவு
x

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு அளவு, தடுப்பு நடவடிக்கைகள் பற்றி செயலகத்தில் ஆலோசனை நடந்தது.

புதுடெல்லி,

டெல்லியில் காற்று மாசுபாடு கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காற்றின் தரமும் மோசமடைந்து வருகிறது. இதனை தொடர்ந்து, டெல்லி சுற்றுச்சூழல் துறை மந்திரி கோபால் ராய் தலைமையில் இன்று சீராய்வு கூட்டம் ஒன்று டெல்லி செயலகத்தில் நடந்தது.

இந்த கூட்டத்தில், டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு அளவு மற்றும் அதனை தடுப்பதற்கான செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்டவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், காற்று தரக்குறியீடு 400-க்கு நெருங்கிய அளவில் உள்ள பகுதிகளில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கட்டுமான பணிகளை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இதேபோன்று, டெல்லிக்குள் டீசல் பஸ்கள் நுழைவதற்கு இன்று முதல் தடை விதிப்பது என்றும் முடிவானது. இதற்காக 18 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால், அடுத்த 15 முதல் 20 நாட்கள் மிக முக்கியம் வாய்ந்தவை என்று ராய் கூறியுள்ளார்.


Next Story