இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்தது டிஜிசிஏ


இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்தது டிஜிசிஏ
x
தினத்தந்தி 28 May 2022 4:32 PM IST (Updated: 28 May 2022 4:32 PM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வந்த பெற்றோரை விமானத்தில் ஏற விடாமல் தடுத்த சம்பவம் கண்டனத்திற்கு உள்ளானது.

புதுடெல்லி,

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி விமான நிலையத்தில், இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள், ஒரு மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வந்த பெற்றோரை விமானத்தில் ஏற விடாமல் தடுத்த சம்பவம் கண்டனத்திற்கு உள்ளானது.

ராஞ்சி விமான நிலையத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம், இண்டிகோ விமான நிறுவனம் அதன் பயணிகளை தகாத முறையில் கையாண்டது எனத்தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து விமான போக்குவரத்து இயக்குனரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், மாற்றுத்திறனாளி குழந்தையை இண்டிகோ விமான நிறுவனம் கையாண்டது கண்ணியக்குறைவானது எனவும் நிலமையை மோசமாக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும் டிஜிசிஏ தெரிவித்துள்ளது.


Next Story