புதிய விமானங்களை இறக்குமதி செய்ய ஏர் இந்தியா, இண்டிகோ நிறுவனங்களுக்கு டி.ஜி.சி.ஏ. ஒப்புதல்
விமானங்களை இறக்குமதி செய்ய டி.ஜி.சி.ஏ. கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய மந்திரி வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் விமான போக்குவரத்துத் துறை இணை மந்திரி வி.கே.சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ஏர் இந்தியா நிறுவனம் 480 விமானங்களையும், இண்டிகோ நிறுவனம் 500 விமானங்களையும் இறக்குமதி செய்ய டி.ஜி.சி.ஏ. கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இறக்குமதிக்கு தடையில்லா சான்று அளிக்கும் போது விமானங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் இடங்கள் உறுதி செய்யப்படுவதாகவும், இதற்காக விமான நிறுவனங்கள் தங்கள் திட்டத்தை விமான நிலைய செயல்பாட்டு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் வி.கே.சிங் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story