திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - தரிசனம் செய்ய பல மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு


திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - தரிசனம் செய்ய பல மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு
x
தினத்தந்தி 19 Sept 2022 12:39 PM IST (Updated: 19 Sept 2022 12:42 PM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி மாதம் பிறந்ததையொட்டி திருப்பதியில் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

திருப்பதி,

புரட்டாசி மாதம் பிறந்ததையொட்டி திருப்பதியில் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். புரட்டாசி மாதத்தில் ஒரு தடவையாவது ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும் என பக்தர்கள் எண்ணுகின்றனர். இதனால் நடைபாதையாகவும், வாகனங்கள் மூலமாகவும் திருப்பதிக்கு ஏராளமானபக்தர்கள் வந்துள்ளனர். திருமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்படுகிறது. இதனால் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

வைகுந்தம் காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி 3 கி.மீ. தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். இலவச தரிசனத்தில் 30 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று தரிசனத்திற்கு வந்த பக்தர்களே இன்னும்கோவில் வளாகத்திற்குள் செல்ல முடியவில்லை அந்த அளவிற்கு கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. தொடர்ந்து அதிகஅளவிலான பக்தர்கள் வந்துகொண்டே உள்ளனர்.

பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்கவும் அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யவும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் விரைவான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். திருப்பதியில் நேற்று 88,924 பேர் தரிசனம் செய்தனர். 34,282 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.72 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.


Next Story