காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடகா, ராஜஸ்தானில் வளர்ச்சி பணிகள் தடைப்பட்டுள்ளது-மோடி விமர்சனம்
காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடகா, ராஜஸ்தானில் வளர்ச்சி பணிகள் தடைப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புனே,
பிரதமர் மோடி லோக்மான்யா திலக் தேசிய விருது வாங்கவும், பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்க புனே வந்தார். அவர் புனேயில் 2 புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்தார். ரூ.15 ஆயிரம் கோடி மேம்பாட்டு பணிக்களுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் அவர் காங்கிரஸ் ஆளும் கர்நாடகா, ராஜஸ்தானில் வளர்ச்சி பணிகள் தடைப்பட்டுள்ளதாக பேசினார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது:- பெங்களூரு மேம்பாட்டு பணிகளுக்கு நிதியில்லை என கர்நாடக அரசு ஒத்துக்கொண்டு உள்ளது. ராஜஸ்தான் மாநிலமும் பெரும் கடன் சுமையில் உள்ளது. அங்கு வளர்ச்சி பணிகள் தடைப்பட்டு உள்ளது. பெங்களூரு உலகளாவிய முதலீடு மையம், தகவல் தொழில்நுட்ப துறையின் மையம். எந்த கட்சியும் தங்கள் சொந்த லாபத்துக்காக அரசு கருவூலத்தை காலி செய்தால், மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள். அதே நிலைதான் ராஜஸ்தானிலும் நிலவுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.