ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2.5 கோடி மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் அழிப்பு


ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2.5 கோடி மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் அழிப்பு
x

ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2.5 கோடி மதிப்புள்ள மதுபான பாட்டில்களை போலீசார் ரோடு ரோலர் ஏற்றி அழித்தனர்.

பெனுகொண்டா,

ஆந்திராவில் மதுபானத்தின் விலை சற்று அதிகமாக இருப்பதால் அண்டை மாநிலங்களான கர்நாடகா, தெலுங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து கடத்தி வந்து மதுபானம் விற்பனை செய்யப்பட்டது.

இதை தடுப்பதற்காக சோதனைசாவடிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார் இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை பறிமுதல் செய்து 858 பெட்டிகளில் அடுக்கி பெனுகொண்டா காவல் நிலையத்தில் இருப்பு வைத்திருந்தனர்

இந்த நிலையில் அவற்றை சாலையில் வரிசையாக அடுக்கி ரோடு ரோலர் ஏற்றி போலீசார் அழித்தனர். அப்போது உடைந்த மதுபாட்டில்களில் இருந்து வெளியான மதுபானம் ஆறு போல் சாலையில் ஓடியது.


Next Story