திராவகம் ஊற்றி பாக்கு மரங்கள் அழிப்பு; மா்மநபர்களுக்கு வலைவீச்சு


திராவகம் ஊற்றி பாக்கு மரங்கள் அழிப்பு; மா்மநபர்களுக்கு வலைவீச்சு
x

என்.ஆர்.புரா அருகே முன்விரோதத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பாக்கு மரங்ககளை, திராவகம் ஊற்றி அழித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

சிக்கமகளூரு;

பாக்கு மரங்கள் அழிப்பு

சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா முத்தினகொப்பா கிராமத்தை சேர்ந்தவர் வர்கீஸ். விவசாயியான இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் 5 ஏக்கரில் பாக்கு தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது மரங்களில் இருந்த பாக்குகள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்துள்ளது. இந்த நிலையில் யாரோ மர்மநபா்கள் வர்கீசின் தோட்டத்திற்குள் புகுந்துள்ளனர்.

பின்னர் மர்மநபர்கள், பூச்சிகொல்லி மருந்தில் திராவகத்தை கலந்து அதனை பாக்குமரங்களின் வேர் பகுதியில் ஊற்றிவிட்டு சென்றதாக தெரிகிறது. இதனால் பாக்குமரங்கள் சிறிது நாட்களிலேயே காய்ந்து கீழே விழுந்துள்ளது. இதைகண்டு வர்கீஸ் அதிர்ச்சி அடைந்தார்.

அப்போது தான் அவருக்கு, மர்மநபர்கள் தோட்டத்திற்குள் புகுந்து திராவகத்தை ஊற்றி பாக்கு மரங்களை அழித்தது தெரியவந்தது. இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும்.

போலீசில் புகார்

இதுகுறித்து விவசாயி வர்கீஸ், என்.ஆர்.புரா போலீசில் புகார் அளித்தார். அதில் முன்விரோதத்தில் மர்மநபர்கள், தோட்டத்திற்குள் புகுந்து திராவகத்தை ஊற்றி பாக்குமரங்களை அழித்ததாகவும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படியும் தெரிவித்தார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story