"சமோசாவிற்கு ஸ்பூன் கிடையாதா?"- முதல் மந்திரி உதவி எண்ணை அழைத்து புகார் செய்த வாடிக்கையாளர்


சமோசாவிற்கு ஸ்பூன் கிடையாதா?- முதல் மந்திரி உதவி எண்ணை அழைத்து புகார் செய்த வாடிக்கையாளர்
x

சமோசா வாங்கிய போது ஸ்பூன் வழங்கப்படவில்லை என வாடிக்கையாளர் புகார் தெரிவித்துள்ளார்.

போபால்,

பொது மக்கள் தங்களின் புகார்களை தெரிவிப்பிதற்காக நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களில், முதலமைச்சர் உதவி எண் உள்ளிட்ட பல உதவி எண்கள் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், மத்திய பிரதேச மாநிலத்திலும் முதல் மந்திரி உதவி எண்கள் செயல்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் அம்மாநிலத்தை சேர்ந்த வன்ஷ் பகதூர் என்ற நபர் சமீபத்தில் முதல் மந்திரி உதவி எண்ணுக்கு அழைத்துள்ளார். அதில் அவர் சதர்பூர் பேருந்து நிலையம் அருகே உள்ள சமோசா கடையில் இருந்து சமீபத்தில் சமோசா வாங்கிய போது தனக்கு ஸ்பூன் மற்றும் தட்டுகள் வழங்கப்படவில்லை என புகார் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சனையை தீர்த்து வைக்கும் படியும் அவர் குறிப்பிட்டுள்ளார். வன்ஷ் பகதூர் புகார் அளித்த 5 நாட்களுக்கு பிறகு அவரது புகார் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பின்னர் இந்த புகாரை வன்ஷ் பகதூர் மற்றும் சம்பந்தப்பட்ட சமோசா கடை இடையே பேசிமுடிவுக்கு கொண்டு வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்பூன் தரவில்லை என்பதற்காக முதல் மந்திரி உதவி எண் வரை சென்று வாடிக்கையாளர் புகார் அளித்த சம்பவம் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது .


Next Story