தேக்கு மரங்களை வெட்ட அனுமதி மறுப்பு: விஷம் குடித்து விவசாயி தற்கொலை முயற்சி


தேக்கு மரங்களை வெட்ட அனுமதி மறுப்பு: விஷம் குடித்து விவசாயி தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 22 Sept 2022 7:00 PM (Updated: 22 Sept 2022 7:01 PM)
t-max-icont-min-icon

குண்டலுபேட்டை அருகே தேக்கு மரங்களை வெட்ட அனுமதி மறுத்ததால் விஷம் குடித்து விவசாயி தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

கொள்ளேகால்;


சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா அங்கரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் உமேஷ் (48 வயது). விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்தில் 17 தேக்கு மரங்கள் உள்ளது.

இந்த தேக்கு மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வழங்கவேண்டும் என்று வனத்துறை அலுவலகத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் வனத்துறை அதிகாரிகள் தேக்கு மரங்களை வெட்டுவதற்கு அனுமதி மறுத்துவிட்டனர்.

இதனால் மனம் நொந்த அவர் வனத்துறை அலுவலகத்திலேயே விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். இதை பார்த்த விவசாயிகள் சிலர் உடனே அவரை மீ்ட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குண்டலுபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Next Story