டெல்லியில் லேசான மழை பெய்தாலும், யமுனையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு


டெல்லியில் லேசான மழை பெய்தாலும், யமுனையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு
x
தினத்தந்தி 17 July 2023 12:58 AM IST (Updated: 17 July 2023 12:59 AM IST)
t-max-icont-min-icon

பல பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீர் இன்னும் வற்றாமல் இருப்பதால், மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

டெல்லி,

டெல்லியில் கடந்தசில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதன் காரணமாக யமுனை ஆற்றில் வெள்ளப்பருக்கு ஏற்பட்டது. இதனால், யமுனை நதியை ஒட்டிய பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பல பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீர் இன்னும் வற்றாமல் இருப்பதால், மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், யமுனையின் நீர்மட்டம் தற்போது தொடர்ந்து குறைந்து வருகிறது.

யமுனையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்தாலும், டெல்லியின் சில பகுதிகளில் நேற்று மாலையில் லேசான மழை பெய்தது. எனினும், இந்த மழை ஆற்றின் நீர்மட்டத்தில் குறிப்பிடத்தக்க உயர்வை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.


Next Story