மெட்ரோ ரெயிலில் கைக்குட்டையை விட குறைவான உடையில் இளம்பெண் "அது எனது சுதந்திரம்" என்கிறார்


மெட்ரோ ரெயிலில் கைக்குட்டையை விட குறைவான உடையில் இளம்பெண் அது எனது சுதந்திரம் என்கிறார்
x
தினத்தந்தி 6 April 2023 1:33 PM IST (Updated: 6 April 2023 1:40 PM IST)
t-max-icont-min-icon

சக பயணிகளின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும் என டெல்லி மெட்ரோ நிர்வாகம் வேண்டுகோள்.

புதுடெல்லி

டெல்லி மெட்ரோவில் பயணம் செய்த ரிதம் சனானா என்ற இளம் பெண் கைகுட்டையைவிட குறைவான உள்ளாடைகளை மட்டுமே அணிந்து பயணம் செய்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.இதற்கு பல்வேறு தரப்பிலும் அதிர்ச்சியும் விமர்சனமும் தெரிவிக்கப்பட்டது..

இந்நிலையில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள டெல்லி மெட்ரோ நிர்வாகம் சக பயணிகளின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான ஆடைகள் மற்றும் நடவடிக்கைகளை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

டெல்லி மெட்ரோ பராமரிப்பு மற்றும் இயக்க விதிகளின்படி ஆபாசம் என்பது தண்டனைக்குரிய குற்றம் என தெரிவித்துள்ள மெட்ரோ நிர்வாகம் மெட்ரோ போன்ற பொது போக்குவரத்தில் பயணம் செய்யும்போது கண்ணியத்தை கடைபிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பயணத்தின் போது ஆடைகளின் விருப்பம் தேர்வு என்பது தனிப்பட்ட விவகாரம் என தெரிவித்துள்ள மெட்ரோ நிர்வாகம் பயணிகள் பொறுப்புள்ள முறையில் தங்களது நடத்தையை சுய ஒழுங்கு முறைப்படுத்திக் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மெட்ரோ ரெயில் ஆபாச ஆடையுடன் பயணித்த பெண்ணின் பெயர் ரிதம் சனானா. ரிதம் ஒரு செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில்

"நான் குட்டையான ஆடைகளை அணிவதில் சிக்கல் என்றால், எனது வீடியோக்களை எடுப்பவர்களுக்கும் சிக்கல் இருக்க வேண்டும். நான் எந்த மாதிரியான ஆடைகளை அணிய வேண்டும் என்பதில் எனக்கு முழு சுதந்திரம் உள்ளது. விளம்பரத்துக்காக நான் அதைச் செய்யவில்லை.

மக்கள் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்படுவதில்லை என்று ரிதம் அப்பட்டமாக கூறினார். இதுமட்டுமின்றி உர்பி ஜாவித் என்ற பெயரை தனக்கு தெரியாது என்றும் ரிதம் கூறியுள்ளார். உர்பி ஜாவித் பற்றி சமீபத்தில் தனது நண்பர் ஒருவர் கூறியதாக அவர் கூறினார். நான் அவரைப்போல இருக்க முயற்சிக்கவில்லை என்று கூறுகிறார். இது தான் தன் வாழ்க்கை, எப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழ்வேன் என கூறினார்


Next Story