டெல்லியில் 47 கோப்புகளை திருப்பி அனுப்பினார் துணை நிலை கவர்னர்


டெல்லியில் 47 கோப்புகளை திருப்பி அனுப்பினார் துணை நிலை கவர்னர்
x

முதல்-மந்திரி கெஜ்ரிவால் கையெழுத்து இல்லாமல், அவரது அலுவலக ஊழியர்கள் கையெழுத்திட்டு அனுப்பிய கோப்புகளை துணைநிலை கவர்னர் சக்சேனா திருப்பி அனுப்பி உள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணைநிலை கவர்னர் வினய் குமார் சக்சேனா இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

இந்த நிலையில், முதல்-மந்திரி அலுவலக அதிகாரிகள், கவர்னரின் ஒப்புதலுக்காக 47 கோப்புகளை அனுப்பி வைத்தனர். அந்த கோப்புகளில் முதல்-மந்திரி கையெழுத்திற்கு பதிலாக அதிகாரிகள் கையெழுத்து போட்டிருந்தனர்.

கடந்த வாரம் கெஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதிய சக்சேனா, முதல்-மந்திரி அலுவலகம் முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் கையெழுத்து இல்லாமல் கவர்னர் செயலகத்திற்கு கோப்புகளை அனுப்புவதை சுட்டிக்காட்டி இருந்தார்.

இந்த நிலையில், முதல்-மந்திரி கெஜ்ரிவால் கையெழுத்து இல்லாமல், அவரது அலுவலக ஊழியர்கள் கையெழுத்திட்டு அனுப்பிய கோப்புகளை துணைநிலை கவர்னர் வினய் குமார் சக்சேனா திருப்பி அனுப்பி உள்ளார்.

கவர்னர் அலுவலகத்தால் திருப்பி அனுப்பப்பட்ட கோப்புகளில் கல்வித்துறை மற்றும் வக்பு வாரியம் தொடர்பான கோப்புகளும் உள்ளதாக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.


Next Story