நாட்டையே உலுக்கிய வழக்கில் திடீர் திருப்பம்; ஆள் மாறாட்டம் நடைபெற்றது அம்பலம்


நாட்டையே உலுக்கிய வழக்கில் திடீர் திருப்பம்; ஆள் மாறாட்டம் நடைபெற்றது அம்பலம்
x

மேலும் அஞ்சலி மரண வழக்கில் ஒரே நேரில் பார்த்த சாட்சி நிதி என்ற பெண் என்பது தெரியவந்துள்ளது.இவர் ஏற்கனவே போதை பொருள் வழக்கில் கைதாகி உள்ளார் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது

புதுடெல்லி

கடந்த 1-ம் தேதி நாடு முழுவதும் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது டெல்லியில் உள்ள கஞ்சவாலா என்ற பகுதியில் நிர்வாண கோலத்தில் இளம்பெண் ஒருவர் காரில் 13 கிலோமீட்டர் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்து கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் இளம்பெண்ணின் உஅடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் தொடர்ந்து அப்பகுதியில் ரோந்து செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது காரை பிடித்து காரில் இருந்த 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.

தொடர்ந்து அந்த பெண் யார் என்ன என்று விசாரிக்கையில், அவர் பெயர் அஞ்சலி எனவும், வயது 20 எனவும் தெரியவந்தது. தொடர்ந்து இந்த விபத்து சுல்தான்பூரி என்ற இடத்தில் நிகழ்ந்திருக்கலாம் எனவும், சுமார் 12- 14 கி.மீ வரை அந்த பெண் காரில் இழுத்து செல்லப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. சுமார் 400-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த அதிகாரிகள், அஞ்சலியுடன் அவரது தோழி இருந்ததை கண்டறிந்தனர்.

மேலும் அஞ்சலி காரில் இழுத்து செல்லப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சில நாட்களுக்கு முன்னர் காரில் இருந்த தீபக் கண்ணா, அமித் கண்ணா, கிரிஷன், மிதுன், மனோஜ் மிட்டல் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தற்போது அதில் மிகப்பெரிய ஏமாற்று ஒன்று நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது .

இந்த வழக்கில் விபத்து நடந்தபோது கார் ஓட்டியதாக கைது செய்யப்பட்ட தீபக் காரிலேயே இல்லை என்பதும் அவர் தனது வீட்டில் அப்போது இருந்ததும் தெரியவந்துள்ளது. விசாரணையில் வெளியான தகவலின் படி, விபத்து நடந்தபோது காரை அமித் என்பவர் ஓட்டி வந்த நிலையில், அவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருந்துள்ளது.

மேலும், அங்கிருந்தவர்களிடம் ஓட்டுநர் உரிமம் இல்லாததால் அவரது நண்பரான தீபக் என்பவரை கார் ஓட்டியதாக பொய் சொல்லக்கூறியதும், அதற்கு தீபக் ஒப்புக்கொண்டதும் தெரியவந்தது. முதலில் தீபக்கின் மொபைல் அழைப்புகளை சோதனை செய்தபோது சம்பவம் நடந்தபோது அவர் வீட்டில் இருந்தது தெரியவந்தது.இதன் அடிப்படையில் நடந்த விசாரணையில் இந்த சம்பவம் தெரியவந்துள்ளது.போலீசாருக்கு தவறான தகவல் கொடுத்த 6வது குற்றவாளியான அசுதோஷ் கைது செய்யப்பட்டுள்ளார். ஐந்து பேரும் அசுதோஷிடம் கடன் வாங்கிய காரை ஓட்டி வந்தனர்.

மேலும் அஞ்சலி மரண வழக்கில் ஒரே நேரில் பார்த்த சாட்சி நிதி என்ற பெண் என்பது தெரியவந்துள்ளது.இவர் ஏற்கனவே போதை பொருள் வழக்கில் கைதாகி உள்ளார் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.

2020 டிசம்பரில் போதை மருந்து சட்டம் (1985) வழக்கில் நிதி ஆக்ராவில் கைது செய்யப்பட்டார். தற்போது, நிதி ஜாமீனில் வெளியே உள்ளார் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

தெலுங்கானாவில் இருந்து ரெயிலில் கஞ்சா கொண்டு வந்ததற்காக 6 டிசம்பர் 2020 அன்று ஆக்ரா ரெயில் நிலையத்தில் நிதி கைது செய்யப்பட்டார். நிதியுடன் சமீர் மற்றும் ரவி என்ற இரு சிறுவர்களும் கைது செய்யப்பட்டனர்.

சம்பவத்தின் போது அஞ்சலியுடன் இருந்த நிதி, சம்பவத்தன்று அஞ்சலி குடிபோதையில் இருந்ததாக ஊடகங்களுக்கு தெரிவித்து இருந்தார்.


Next Story