அரசு இல்லத்தை காலி செய்ய சுப்ரமணியன் சுவாமிக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவு


அரசு இல்லத்தை காலி செய்ய சுப்ரமணியன் சுவாமிக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவு
x
தினத்தந்தி 14 Sept 2022 8:44 PM IST (Updated: 14 Sept 2022 8:55 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் உள்ள அரசு இல்லத்தை 6 வாரத்திற்குள் காலி செய்ய வேண்டும் என பா.ஜ.க, மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

பா.ஜ.க, மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, கடந்த 2016-ல் மாநிலங்களவை எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, டெல்லியில் அவருக்கு அரசு இல்லம் ஒதுக்கப்பட்டது.

இவரது எம்.பி பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதத்தில் நிறைவடைந்தது. இந்த நிலையில், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் 6 மாத காலம் அரசு இல்லத்தில் தங்க அனுமதிக்குமாறு டெல்லி ஐகோர்ட்டில் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி யஷ்வந்த் வர்மா முன் விசாரணைக்கு வந்தது. பதவியில் உள்ள எம்.பி.க்கள், மத்திய மந்திரிக்களுக்கு அரசு இல்லம் தேவைப்படுகிறது என இந்த வழக்கில் மத்திய அரசு பதிலளித்தது.

இந்த நிலையில், அரசு இல்லத்தை 6 வாரத்திற்குள் காலி செய்ய வேண்டும் என பா.ஜ.க, மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமிக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


Next Story