கோடை முகாமின் கடைசி நாள்; பள்ளி மாணவிகளுடன் இணைந்து நடனமாடிய ஆசிரியை - வைரல் வீடியோ


கோடை முகாமின் கடைசி நாள்; பள்ளி மாணவிகளுடன் இணைந்து நடனமாடிய ஆசிரியை - வைரல் வீடியோ
x

பள்ளியில் கோடை முகாமின் கடைசி நாளான்று மாணவிகளுடன் இணைந்து ஆசிரியை நடனமாடிய வீடியோ வைரலாகியுள்ளது.

புதுடெல்லி,

புதுடெல்லியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் மனு குலதி. இவர் தனது பள்ளியில் கடந்த 15-ம் தேதி நடந்த கோடை முகாமின் கடைசி நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

நிகழ்ச்சியின்போது, ஆசிரியை மனு குலதி மாணவிகளுடன் இணைந்து நடனமாடியுள்ளார். மாணவிகளுடன் இணைந்து நடனமாடிய வீடியோவை மனு தனது சமூகவலைதள பக்கமான டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.




Next Story