2022-ல் 1,096 மணிநேரங்கள் 'நல்ல காற்றை' அனுபவித்தது டெல்லி


2022-ல் 1,096 மணிநேரங்கள் நல்ல காற்றை அனுபவித்தது டெல்லி
x

கடந்த 2022-ம் ஆண்டு டெல்லி மொத்தமாக 1,096 மணிநேரங்கள் 'நல்ல காற்றை' அனுபவித்துள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் 2022-ம் ஆண்டு காற்றின் தரம் 1,096 மணி நேரங்கள் 'நல்லது' பிரிவில் இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது கடந்த 2021-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது அதிகமாக உள்ளது. 2021-ம் ஆண்டு மொத்தமாக 827 மணி நேரங்கள் காற்றின் தரம் 'நல்லது' பிரிவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் 2022-ம் ஆண்டு காற்றின் தரம் 'கடுமையான' பிரிவில் 204 மணி நேரங்கள் மட்டுமே இருந்துள்ளது (PM 2.5 துகள்கள் அடிப்படையில்). இது மொத்த நேரத்தில் 2.3 சதவீதமாகும். 2021-ம் ஆண்டு மொத்த நேரத்தில்7.2 சதவீதம், 628 மணி நேரங்கள் 'கடுமையான' பிரிவில் இருந்தது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின்படி, 2021-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2022-ம் ஆண்டு காற்றின் தரம் 'நல்ல' பிரிவில் இருந்த நேரம் அதிகரித்துள்ளது. 'கடுமையான' பிரிவில் இருந்த நேரம் குறைந்துள்ளது. மேலும் PM 2.5 மற்றும் PM 10 துகள்களின் சராசரி செறிவு குறைந்துள்ளது.

ஆண்டின் முதல் நாளான இன்று டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 252 ஆக 'மோசமான' பிரிவில் உள்ளது. 2022-ம் ஆண்டின் கடைசி நாளான நேற்று காற்றின் தரக்குறியீடு 369-ஆக 'மிகவும் மோசமான' பிரிவில் இருந்தது.


Next Story