மாமிசம் சாப்பிட்டது உண்மை தான்-சி.டி.ரவி எம்.எல்.ஏ. கோவிலுக்குள் செல்லவில்லை; நளின்குமார் கட்டீல் பேட்டி


மாமிசம் சாப்பிட்டது உண்மை தான்-சி.டி.ரவி எம்.எல்.ஏ. கோவிலுக்குள் செல்லவில்லை; நளின்குமார் கட்டீல் பேட்டி
x

மாமிசம் சாப்பிட்டது உண்மை தான் என்றும், ஆனால் சி.டி.ரவி எம்.எல்.ஏ. கோவிலுக்குள் செல்லவில்லை என்றும் நளின்குமார் கட்டீல் எம்.பி. கூறினார்.

பெங்களூரு:

ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகுரில் நேற்று பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

எங்கள் கட்சியின் எம்.எல்.ஏ.வான சி.டி.ரவி மாமிசம் சாப்பிட்டு விட்டு கோவிலுக்கு சென்றதாக காங்கிரஸ் தலைவர்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த விவகாரம் குறித்து சி.டி.ரவியே விளக்கம் அளித்திருக்கிறார். அவர் மாமிசம் சாப்பிட்டது உண்மை தான். ஆனால் ஆஞ்சனேயா சாமி கோவிலுக்குள் சி.டி.ரவி செல்லவில்லை. கோவில் வெளிப்புறம் நின்றபடி தான் சாமி தரிசனம் செய்திருந்தார். சி.டி.ரவிக்கும், சித்தராமையா விவகாரத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. சித்தராமையா மாமிசம் சாப்பிட்டு விட்டு நேரிடையாக தர்மஸ்தலா கோவிலுக்குள் சென்றிருந்தார்.

சி.டி.ரவி சென்ற கோவில் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. கோவிலுக்கு வெளியே பூட்டு கூட போடப்பட்டு இருந்தது. அதனால் சி.டி.ரவி கோவிலுக்கு செல்லாமல் சாமி தரிசனம் செய்ததையும், சித்தராமையா கோவிலுக்குள் சென்றதையும் ஒப்பிட்டு பேசுவது சரியானது இல்லை. புதிதாக கட்சி தொடங்கியுள்ள ஜனார்த்தன ரெட்டியை தான் பார்த்து கொள்வதாக அமித்ஷா கூறி இருப்பதாக வரும் தகவல் உண்மை இல்லை. அதுபற்றி கவலைப்பட வேண்டும், உங்கள் பணியை நீங்கள் செய்யும்படி மட்டுமே அமித்ஷா கூறி இருந்தார்.

இவ்வாறு நளின்குமார் கட்டீல் கூறினார்.


Next Story