மாநிலங்களவை தேர்தலில் தாங்கள் சார்ந்த கட்சிகளின் திட்டங்களை பாழாக்கிய 3 எம்.எல்.ஏக்கள்; ஏன் அப்படி செய்தார்கள்?


மாநிலங்களவை தேர்தலில் தாங்கள் சார்ந்த கட்சிகளின் திட்டங்களை பாழாக்கிய 3 எம்.எல்.ஏக்கள்; ஏன் அப்படி செய்தார்கள்?
x

மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த ஸ்ரீநிவாஸ் கவுடா, குல்தீப் பிஷ்னோய், ஷோப்ராணி குஷ்வாஹா ஆகிய மூவரால் அவர்கள் சார்ந்துள்ள அந்தந்த அரசியல் கட்சிகளுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மாநிலங்களவை தேர்தலில் ராஜஸ்தானின் பாஜக எம்.எல்.ஏ ஷோப்ராணி குஷ்வாஹா, காங்கிரஸ் கட்சியின் அரியானா எம்.எல்.ஏ குல்தீப் பிஷ்னோய் மற்றும் கர்நாடகாவின் ஜேடி(எஸ்) எம்.எல்.ஏ ஸ்ரீநிவாஸ் கவுடா ஆகிய மூவரால் அவர்கள் சார்ந்துள்ள அந்தந்த அரசியல் கட்சிகளுக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.வான குஷ்வாஹா, காங்கிரஸ் வேட்பாளர் பிரமோத் திவாரிக்கு வாக்களித்தார். அவர் பிற்படுத்தப்பட்ட குஷ்வாஹா சமூகத்தைச் சேர்ந்தவர். பாஜக ஆதரவு வேட்பாளர் சந்திரா நடத்தும் ஊடக நிறுவனங்கள் தனக்கு எதிராக பிரச்சாரம் செய்ததாகவும், குஷ்வாஹா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவரை ஆதரிக்கவில்லை என்றும் குஷ்வாஹா குற்றம் சாட்டியுள்ளார்.

மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களிப்பது மற்றும் பண பலத்தை தவறாக பயன்படுத்துவது குறித்து வெளிப்படையாக பேசி வந்த சந்திராவுக்கு வாக்களிக்குமாறு பாஜக என்னை கேட்டுக் கொண்டது என்று குஷ்வாஹா குற்றம் சாட்டியுள்ளார்.

"எனக்கென சீட்டு கேட்டு பாஜகவுக்கு நான் எப்போதும் செல்லவில்லை, ஆனால் கட்சியே நேரடியாக என்னிடம் சீட் கொடுக்க முன்வந்தது. என் மீது நடவடிக்கை எடுத்த கட்சி நிர்வகத்திர்கு மிக்க நன்றி" என அவர் தெரிவித்துள்ளார்.

மறுமுனையில், அரியானாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான பிஷ்னோய் என்பவர், காங்கிரஸ் வேட்பாளர் அஜய் மக்கனுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. "எனது மனசாட்சியின் குரலைக் கேட்ட பிறகு, எனது வாக்கு உரிமையை காங்கிரசுக்கு எதிராக பயன்படுத்தியதாக" அவர் கூறினார். முன்னதாக மாநிலங்களவை தேர்தலுக்கு முன்பு நடத்தப்பட்ட கட்சி எம்எல்ஏக்கள் கூட்டங்களில் பிஷ்னோய் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிஷ்னோய் அரியானா முன்னாள் முதல்வர் பஜன் லாலின் மகன் ஆவார்.

அதேபோல, கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.வான கவுடா என்பவர், தனது கட்சியின் நிலைப்பாட்டை மீறி, காங்கிரசுக்கு வாக்களித்துள்ளார். மேலும், அவ்வாறு செய்ததாக வெளிப்படையாகவே கூறினார். "நான் காங்கிரஸை விரும்பியே வாக்களித்துள்ளேன்" என்று கூறியுள்ளார். மேலும், அவர் விரைவில் காங்கிரசில் இணைவார் எனத் தெரிகிறது.

மேற்கண்ட இவர்கள் மூவர் மீதும், அவரவர் சார்ந்த கட்சி தலைமை கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.


Next Story