கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி: மீண்டும் தொடங்கிய கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தி
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலியாக, கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தி மீண்டும் தொடங்கியது.
புதுடெல்லி,
மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம், கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்து வந்தது. கொரோனா பாதிப்பு குறைந்ததால், கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கோவிஷீல்டு உற்பத்தியை நிறுத்தி விட்டது.
இந்நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தியை மீண்டும் தொடங்கி விட்டதாக சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:-
தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏதும் இல்லை. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசியாக அங்கீகரிக்கப்பட்ட 'கோவோவேக்ஸ்' தடுப்பூசி, 60 லட்சம் கையிருப்பு உள்ளது. ஆனால் தேவைதான் பூஜ்யமாக இருக்கிறது.
'கோவின்' வலைத்தளத்திலும் கோவோவேக்ஸ் இடம்பெற்றுள்ளது என்று அவர் கூறினார்.
Related Tags :
Next Story