கள்ளக்காதல் விவகாரத்தில் லாரி டிரைவர் கொலை வழக்கில் தம்பதி விடுதலை; பெங்களூரு கோர்ட்டு தீர்ப்பு
கள்ளக்காதல் விவகாரத்தில் லாரி டிரைவர் கொலை வழக்கில் தம்பதி விடுதலை செய்து பெங்களூரு கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
பெங்களூரு:
பெங்களூரு மங்கமனபாளையாவை சேர்ந்த முக்தியார் அகமது(வயது45), அவரது மனைவி ரேஷ்மா(30). இந்த நிலையில் ரேஷ்மாவுக்கும், அவரது உறவினரான லாரி டிரைவர் சமியுல்லா என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்த நிலையில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் சமியுல்லாவை கடந்த 2014-ம் ஆண்டு முக்தியார், ரேஷ்மா சேர்ந்து கொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மடிவாளா போலீசார் தம்பதியை கைது செய்தனர்.
விசாரணைக்கு பின்னர் 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். ரேஷ்மா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால் முக்தியார் மட்டும் சிறையில் இருந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக பெங்களூரு கோர்ட்டில், மடிவாளா போலீசார் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். ஆனால் சாட்சி ஆதாரங்களை போலீசார் சமர்ப்பிக்க தவறி விட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இதற்கான தீர்ப்பை நீதிபதி வெளியிட்டார்.