லைவ் அப்டேட்ஸ்: 3 மாநில தேர்தல்- நாகலாந்து, திரிபுராவில் பாஜக ஆட்சி அமைக்கிறது
திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி,
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
*திரிபுராவில் தற்போது முதல்-மந்திரி மாணிக் சகா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.
*மேகாலயாவில் முதல்-மந்திரி கான்ராட் சங்மா தலைமையில் என்.பி.பி. என்னும் தேசிய மக்கள் கட்சி ஆட்சி நடக்கிறது.
*நாகாலாந்தில் முதல்-மந்திரி நைபியு ரியோ தலைமையில் என்.டி.பி.பி. ஆட்சி நடக்கிறது.
3 மாநில சட்டசபை தேர்தலின் முடிவுகள் இன்று மாலைக்குள் அறிவிக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 3 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது இன்று மாலை தெரிய வரும்.
Live Updates
- 2 March 2023 11:51 AM IST
மேகாலயா சட்ட மன்ற தேர்தலில் என்.பி.பி கட்சி 24 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 7 இடங்களிலும், பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தலா 6 இடங்களிலும், யூடிபி கட்சி 5 இடங்களிலும் பிற ட்சிகள் 11 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
- 2 March 2023 11:41 AM IST
திரிபுராவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது. மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டி பாஜக முன்னிலை பெற்றுள்ளது.
- 2 March 2023 9:37 AM IST
*திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில் பாஜக கூட்டணி வெற்றிமுகம்
*60 தொகுதிகளை கொண்ட திரிபுரா தேர்தல் - 42 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை
*60 தொகுதிகளை கொண்ட நாகாலாந்து தேர்தல் - 37 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை
- 2 March 2023 9:26 AM IST
60 தொகுதிகளை கொண்ட மேகாலயா சட்டப்பேரவை தேர்தல் - ஆளும் என்பிபி தொடர்ந்து முன்னிலை
- 2 March 2023 9:08 AM IST
மேகலாயாவில் பாஜகவுக்கு திடீர் பின்னடைவு.. திரிபுராவில் ட்விஸ்ட் வைக்கும் புதிய கட்சி