நாட்டை ஊழல் அற்றதாக கட்டமைக்க சிபிஐ போன்ற அமைப்பு அவசியம்: பிரதமர் மோடி


நாட்டை ஊழல் அற்றதாக கட்டமைக்க சிபிஐ போன்ற அமைப்பு அவசியம்: பிரதமர் மோடி
x

நாட்டை ஊழல் அற்றதாக கட்டமைக்க சிபிஐ போன்ற அமைப்பு அவசியம் என்று பிரதமர் மோடி பேசினார்.

புதுடெல்லி,

மத்திய விசாரணை அமைப்பான சிபிஐயின் வைரவிழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:- நாட்டின் வளர்ச்சியில் விசாரணை முகமைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நாட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக ஊழல் மேல் ஊழல் இருந்தது. ஊழல் செய்தவர்கள் எது குறித்தும் அச்சப்படவில்லை. விசாரணை அமைப்புகள் அவர்கள் பக்கம் இருந்தன. விசாரணை அமைப்புகளின் நிலை தற்போது மாறியுள்ளது.

சிபிஐ நடவடிக்கை எடுக்கும் நபர்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்கள் என எனக்கு தெரியும். அதை கண்டு அஞ்சாமல் சிபிஐ தொடர்ந்து தனது பணியை செய்ய வேண்டும். ஊழல்வாதி ஒருவர் கூட தப்பக்கூடாது. சாதாரண மக்களுக்கு வலிமையையும் நம்பிக்கையும் வழங்குகிறது. சிபிஐ நீதியின் அடையாளமாக மாறியுள்ளதால் முக்கிய விவகாரங்களில் மக்கள் சிபிஐ விசாரணை கோரும் நிலை ஏற்பட்டுள்ளது . நாட்டை ஊழல் அற்றதாக மாற்ற சிபிஐ போன்ற திறமை வாய்ந்த அமைப்பு அவசியம். 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஊழல் மற்றும் கருப்பு பணத்திற்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது" என்றார்.


Next Story