ரூபாய் நோட்டுக்கான நூல் சப்ளையில் ஊழல்: முன்னாள் நிதி செயலாளர் வீட்டில் சி.பி.ஐ. சோதனை


ரூபாய் நோட்டுக்கான நூல் சப்ளையில் ஊழல்: முன்னாள் நிதி செயலாளர் வீட்டில் சி.பி.ஐ. சோதனை
x

ரூபாய் நோட்டுக்கான நூல் சப்ளையில் ஊழல் காரணமாக முன்னாள் நிதி செயலாளர் வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தினர்.

புதுடெல்லி,

கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நிதித்துறை செயலாளராக இருந்தவர் அரவிந்த் மாயராம். சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்று விட்டார்.

ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு நூல் சப்ளை செய்வதற்காக இங்கிலாந்தை சேர்ந்த டி லா ரு இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. காலாவதி ஆன அந்த ஒப்பந்தத்தை உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக 3 ஆண்டுகள் நீட்டித்ததாக அரவிந்த் மாயராம் மீது புகார் எழுந்தது.

அதன்பேரில், அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. டெல்லி, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் உள்ள அவரது வீடுகளில் சி.பி.ஐ. நேற்று சோதனை நடத்தியது. அரவிந்த் மாயராம், தற்போது ராஜஸ்தான் முதல்-மந்திரியின் பொருளாதார ஆலோசகராக இருக்கிறார். சமீபத்தில், ராகுல்காந்தியின் பாதயாத்திரையில் பங்கேற்றார்.


Next Story