நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 146 நாட்கள் இல்லாத அளவிற்கு தினசரி கொரோனா பாதிப்பு 1590- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்து 601- ஆக உள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 22 ஆம் தேதி பிரதமர் மோடி அதிகரிகளுடன் உயர் மட்ட ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின் போது, கொரோனா பாதிப்பு நிலவரம், கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்காக முன்னெச்சரிக்கை செயல்பாடுகள் உள்ளிட்டவை தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறிதல், கண்காணித்து சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் உள்பட 5 வகையான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். கொரோனா வைரஸ்களின் மரபணு சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை விடுத்து இருந்தார்.