மேற்குவங்கத்தில் ஹிஜாப்-காவி அணிவது குறித்து மோதல்.. தேர்வுகள் ரத்து - பள்ளியில் பரபரப்பு


மேற்குவங்கத்தில் ஹிஜாப்-காவி அணிவது குறித்து மோதல்.. தேர்வுகள் ரத்து - பள்ளியில் பரபரப்பு
x
தினத்தந்தி 24 Nov 2022 8:58 AM IST (Updated: 24 Nov 2022 10:38 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்கத்தில் உள்ள பள்ளியில் ஹிஜாப் மற்றும் காவி அணிவது தொடர்பாக இரு குழுக்களிடையே கைகலப்பு ஏற்பட்டது.

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் உள்ள பள்ளியில் ஹிஜாப் மற்றும் காவி அணிவது தொடர்பாக இரு குழுக்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. ஹவுராவின் துலாகரில் உள்ள ஒரு பள்ளி வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிய அனுமதிக்கப்பட்ட குழுவினருக்கு எதிராக மற்றொரு பிரிவு 'காவி அணிந்து வந்தனர்.

இதனால் பள்ளி உடைமைகளை மாணவர்கள் சேதப்படுத்தினர். நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால், காவல்துறையினரும், விரைவு அதிரடிப் படையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு, பள்ளியில் நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மேலும், மாணவர்கள் இனி பள்ளி சீருடையில் பள்ளிக்கு வர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.


Next Story