பயங்கரவாத செயல்களுடன் தொடர்பு; 2-வது நாளாக காஷ்மீர், சண்டிகாரில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை


பயங்கரவாத செயல்களுடன் தொடர்பு; 2-வது நாளாக காஷ்மீர், சண்டிகாரில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை
x

காஷ்மீர் மற்றும் சண்டிகாரில் பயங்கரவாத செயல்களுடனான தொடர்பு பற்றி 2-வது நாளாக என்.ஐ.ஏ. அதிரடி சோதனை நடத்தி வருகிறது.



புதுடெல்லி,


காஷ்மீரில் நடப்பு ஆண்டில் காஷ்மீரி பண்டிட்டுகள் மீது தாக்குதல்கள் அதிகரித்து காணப்பட்டன. சிறுபான்மையினர், பாதுகாப்பு அதிகாரிகளை இலக்காக கொண்டும் மற்றும் சமூக நல்லிணக்கத்துக்கு எதிரான வேற்றுமையை பரப்பும் நோக்கத்துடன் காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் பரவின.

இதேபோன்று பாகிஸ்தானில் இருந்து செயல்படும் நபர்களின் உத்தரவுகளால் நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல்களும் காஷ்மீரில் அதிகரித்தன. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்து வரும் இந்த தாக்குதலை தொடர்ந்து, தேசிய புலனாய்வு முகமையின் (என்.ஐ.ஏ.) ஜம்மு பிரிவு கடந்த 2021-ம் ஆண்டு ஜூனில் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதன்படி, ஜம்மு மற்றும் காஷ்மீர், சண்டிகாரில் பயங்கரவாத செயல்களுடனான தொடர்பு பற்றி இன்று காலை முதல் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை நடத்தி வருகிறது. சந்தேகத்திற்குரிய நபர்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் பிற இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.

இணையதளம் வழியேயும் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இதனை முன்னிட்டு இந்த அதிரடி நடவடிக்கை தொடருகிறது. நேற்றும் இதேபோன்று காஷ்மீரின் குல்காம், புல்வாமா, அனந்த்நாக், சோப்பூர் மற்றும் ஜம்மு மாவட்டங்களில் அதிரடி சோதனை நடந்தது. இதுபோன்று 14 இடங்களில் சோதனை நடந்தது. இதில், சிம் கார்டுகள், டிஜிட்டல் உபகரணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story