காங்கிரஸ் கட்சிக்கு பொம்மை தலைவர் இருக்க கூடாது- பிரிதிவி ராஜ் சவான் விமர்சனம்
காங்கிரஸ் கட்சிக்கு பொம்மை தலைவர் இருக்க கூடாது என கட்சியின் மூத்த தலைவர் பிரிதிவி ராஜ் சவான் விமர்சனம் செய்து உள்ளார்.
மும்பை,
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் நேற்று முன்தினம் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். இது பற்றி மராட்டிய மாநில முன்னாள் முதல் மந்திரியுமான கட்சியின் மூத்த தலைவருமான பிரிதிவி ராஜ் சவானிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்டது. இது பற்றி அவர் தெரிவிக்கையில் மூத்த அரசியல்வாதிகள் வெளியேற்றம் கட்சியில் தொடர்கதையாக நடந்து வருகிறது. இது துரதிர்ஷடவசமானது எனவும், குலாப் நபி ஆசாத் கட்சியின் அனைவரும் அறிந்த பிரபல மூத்த தலைவரும், மக்களிடடையே அறிமுகமானவராகவும் இருந்து வந்தார். இவர் கடந்த 2020-ம் ஆண்டில் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் ஒன்று எழுதி இருந்தார்.
இதில் கட்சியின் உள்சீர்திருத்தங்களை மேற்கொள்ளும்படி தெரிவித்தார். ஆனால் அதன்படி நடக்க வில்லை. கடந்த 24 ஆண்டாக கட்சி அமைப்புக்கான தேர்தல் நடத்தவில்லை. உள்கட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உதவ வேண்டும். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மாற்று தலைவர் காங்கிரஸ் கட்சி கொண்டு வரவில்லை என்றால் கட்சியில் வரலாறு படைக்கும் தவறை செய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் மத்திய அரசில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லாததையும் கட்சிக்கு பொம்மை தலைவர் இருக்க கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டி பேசினார்.