மணிப்பூர் வன்முறைக்கு காங்கிரஸ் கட்சியே காரணம் - மத்திய இணையமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன்சிங்


மணிப்பூர் வன்முறைக்கு காங்கிரஸ் கட்சியே காரணம் - மத்திய இணையமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன்சிங்
x

மணிப்பூர் வன்முறைக்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என்று மத்திய இணையமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன்சிங் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் தற்போது கலவர பூமியாக மாறி உள்ளது. அங்கு பெரும்பான்மை சமூகமாக உள்ள மெய்தி இனத்தினர், தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று ஓங்கிக் குரல் கொடுக்கின்றனர். இதை அங்கு பழங்குடி இனத்தவராக உள்ள நாகா, குகி இன மக்கள் தீவிரமாக எதிர்க்கின்றனர்.

இதனால் அவர்களிடையே கடந்த மே மாதம் 3-ந் தேதி முதல் மோதல் நிலவி வருகிறது. மாநிலம் முழுவதும் பரவிய கலவரங்களில். சுமார் 100-க்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதனால் அங்கு அமைதியற்ற சூழல் நிலவுகிறது. மணிப்பூர் வன்முறைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகிறது.

இந்த நிலையில், மணிப்பூர் மாநில வன்முறைக்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என்று மத்திய இணையமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன்சிங் தெரிவித்துள்ளார். தொடக்கத்தில் இருந்து 2017ஆம் ஆண்டு வரை மணிப்பூர் மாநிலத்தை காங்கிரஸ் கட்சியே ஆட்சி செய்தது; காங்கிரஸ் ஆட்சியின்போது செய்த தவறுகளே தற்போது மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் நடக்க காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Next Story