அரசியல் உள்நோக்கத்துடன் அக்னிபத் திட்டத்தை காங்கிரஸ் எதிர்க்கிறது: வி.கே சிங் குற்றச்சாட்டு
அக்னிபத் திட்டத்தை அரசியல் உள்நோக்கத்துடன் காங்கிரஸ் எதிர்ப்பதாக மத்திய மந்திரியும் முன்னாள் ராணுவ தளபதியுமான விகே சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி,
அக்னிபத் திட்டத்தை அரசியல் உள்நோக்கத்துடன் காங்கிரஸ் எதிர்ப்பதாக மத்திய மந்திரியும் முன்னாள் ராணுவ தளபதியுமான விகே சிங் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து வி.கே சிங் கூறியிருப்பதாவது;- அக்னிபாத் திட்டத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. நாம் எப்போது எந்த சீர்திருத்த நடவடிக்கைகளை கொண்டு வர விரும்புகிறோமோ, அப்போதெல்லாம் எதிர்க்கட்சிகள் அதை முடக்க நினைக்கின்றன
ஏனென்றால் அவர்களால் ஆட்சியில் இருந்தபோதெல்லாம் எந்த சீர்திருத்தமும் செய்ய முடியவில்லை. ஆயுதப்படைகளை சீர்திருத்த வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் முயன்று வருகிறோம். எங்களுக்கு எந்தப் பயமும் இல்லை. ஆனால், ஏனைய அனைத்து அரசியல் கட்சிகளும் பயத்துடன் இருக்கின்றன. உங்களையும் அச்சுறுத்திக் கொண்டே இருப்பார்கள். அதேபோல், இளைஞர்களை தவறாகவும் வழிநடத்துகிறார்கள். போரில், ஆபத்தை எதிர்கொள்ளக்கூடிய வீரர்கள் தேவை. இது இளைஞர்களின் திறனாகும்" என்றார்.