நான் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதா? மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்


நான் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதா? மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்
x

எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்று பேச்சில் வார்த்தைகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்று பேசினார். அப்போது அவர் அதானி விவகாரத்தை எழுப்பினார். அவரது சொத்து மதிப்பு 2 வருடங்களில் ரூ.12 லட்சம் கோடியாக உயர்ந்தது குறித்து கேள்விகளை எழுப்பி, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு வலியுறுத்தினார். அவரது உரையின் குறிப்பிட்ட சிலவார்த்தைகள், அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதற்கு அவர் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை அவர் மாநிலங்களவையில் எழுப்பினார். அப்போது அவர், "எனது பேச்சில் நாடாளுமன்ற நடைமுறைகளுக்கு ஒவ்வாத வார்த்தைகள் ஏதும் இல்லை. நான் விதிகளுக்கும், நடைமுறைகளுக்கும் உட்பட்டுத்தான் பேசினேன். அப்படி இருந்தும் எனது பேச்சில் 6 வார்த்தைகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இது குறித்து நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என சபைத்தலைவர் ஜெகதீப் தன்கரிடம் கூறினார்.

மேலும், "எனது வார்த்தைகளில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்திருந்தால், நீங்கள் இதுகுறித்து என்னிடம் கேட்டிருக்க முடியும்" எனவும் குறிப்பிட்டார். அதற்கு சபைத்தலைவர் ஜெகதீப் தன்கர், "எதிர்க்கட்சி தலைவரின் கடைசி பாதுகாவலர் சபைத்தலைவர்தான்" என குறிப்பிட்டார்.


Next Story