மராட்டியத்தில் 74-வது நாளாக ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணம்...!
மராட்டியத்தில் 74-வது நாளாக ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கினார்.
மும்பை,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை கடந்த செப்டம்பர் 7-ந் தேதி முதல் இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 7-ந் தேதி முதல் மராட்டியத்தில் நடைபயணம் நடந்து வருகிறது.
நேற்று 73-வது நாளாக அவரது நடைபயணம் மராட்டியத்தில் உள்ள புல்தானா மாவட்டத்தில் தொடர்ந்தது. அங்குள்ள சேகாவ் கஜானன் ததா பாட்டீல் மார்க்கெட் யார்டில் இருந்து காலை 6 மணிக்கு ராகுல்காந்தி நடக்க தொடங்கினார்.
அவர் செல்லும் வழியில் பொதுமக்களுடன் கலந்துரையாடினார். இரவில் ஜல்காவ் மாவட்டத்தை நடைபயணம் சென்றடைந்தது. இந்தநிலையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் பெண்ட்வால் மாவட்டத்தில் இருந்து 'பாரத் ஜோடோ யாத்திரை' மீண்டும் தொடங்கினார்.
இன்றுடன் மராட்டியத்தில் நிறைவு பெறும் அவரது நடைபயணம் இரவில் மத்திய பிரதேச மாநிலத்துக்கு சென்று பின்னர் அங்கு பயணிக்க உள்ளது.