சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் பகிரங்கமாகத் தாக்கி பேசுவது ஏன் குலாம் நபி ஆசாத் விளக்கம்


சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் பகிரங்கமாகத் தாக்கி பேசுவது ஏன் குலாம் நபி ஆசாத் விளக்கம்
x

சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் பகிரங்கமாகத் தாக்கி பேசிவது எதனால் என முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விளக்கம் அளித்து உள்ளார்.

ஸ்ரீநகர்

கட்சித் தலைமையை விமர்சித்ததற்காக காங்கிரசின் விமர்சனத்திற்கு உள்ளான குலாம் நபி ஆசாத், ஆகஸ்ட் 26 அன்று ராஜினாமா செய்தார். தொடர்ந்து பிறகு சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் பகிரங்கமாகத் தாக்க தொடங்கினார் இது ஏன் என்பதை அவர் விளக்கி உள்ளார்.

ஜம்முவின் பதேர்வாவில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய குலாம் நபி ஆசாத் கூறியதாவது:-

சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக ஏன் பேசுகிறீர்கள் என்று கேட்கிறார்கள். நீங்கள் பார்த்திருந்தால், எனது கடிதத்தில் உள்ள அனைத்தையும் அவரிடம் தெரிவித்தேன். மூன்று நாட்கள் அமைதியாக இருந்தேன். நான் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், அதன் முடிவில் அவர்கள் தரப்பில் இருந்து எனக்கு எத்ராக ஏவுகணைகள் வீசப்பட்டபோது, துப்பாக்கிச் சூடு தொடங்கும் போது நான் சும்மா இருக்க முடியாது. யாராவது உங்களைத் தாக்கினால் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்று இஸ்லாத்திலும் அரசியலிலும் எழுதப்பட்டுள்ளது.

என் மீது ஏவுகணைகளை வீசினார்கள். நான் 303 (துப்பாக்கி) யிலிருந்து சுட்டு அவை அழிக்கப்பட்டன. நான் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை வீசியிருந்தால், அவர்கள் காணாமல் போயிருப்பார்கள் என கூறினார்.




Next Story