ராஜஸ்தான் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூட்டம் - இன்று நடக்கிறது


ராஜஸ்தான் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூட்டம் - இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 30 Oct 2023 4:35 AM IST (Updated: 30 Oct 2023 11:20 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

200 இடங்கள் கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் அடுத்த மாதம் 25-ந்தேதி நடைபெறுகிறது. இதுவரை காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் 95 பேரின் பெயர் பட்டியல் 3 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ராஜஸ்தான் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதன்படி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு தேர்தல் குழு கூட்டம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story