காமன்வெல்த் போட்டி: குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா காலிறுதிக்கு முன்னேற்றம்


காமன்வெல்த் போட்டி: குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா காலிறுதிக்கு முன்னேற்றம்
x

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய வீராங்கனை லோவ்லினா (70 கிலோ) பெண்களுக்கான லைட் மிடில் வெயிட் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறினார்.

பர்மிங்காம்,

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான ( 70கிலோ ) லைட் மிடில் வெயிட் போட்டியில் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்தியாவின் லோவ்லினா நியூஸிலாந்தின் அரியானா நிக்கல்சனை சந்தித்தார்.

இந்த போட்டியின் முடிவில் தன்னை விட 15 வயது மூத்த வீராங்கனையான அரியானா நிக்கல்சனை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். லோவ்லினா காலிறுதியில் வேல்ஸின் ரோஸி எக்லஸை எதிர்கொள்கிறார்.

இதற்கிடையில், கடந்த 2018-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற முகமது ஹுசாமுதீன் ஆண்களுக்கான ஃபெதர்வெயிட் (57 கிலோ) பிரிவில் தென்னாப்பிரிக்காவின் அம்ஸோலே டையியை தோற்கடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

ஹசாமுதீன் காலிறுதிக்கு அடுத்த சுற்றில் வங்கதேசத்தின் எம்.டி சலீம் ஹொசைனை எதிர்கொள்கிறார்.


Next Story