அனைத்து தேர்தல்களுக்கும் பொதுவான வாக்காளர் பட்டியல் - இந்திய சட்ட ஆணையம் பரிந்துரை
இந்திய சட்ட ஆணையத்தின் பரிந்துரை நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
ஒரே நாடு, ஒரே வாக்காளர் பட்டியலை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு, மத்திய அரசின் சட்டத்துறை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
அதில் நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் ஆகிய தேர்தல்களுக்கு பொதுவான வாக்காளர் பட்டியலை அறிமுகப்படுத்த இந்திய சட்ட ஆணையம் தனது 255-வது அறிக்கையில் பரிந்துரைத்திருப்பதாக குறிப்பிட்டார். மேலும் இந்த பரிந்துரை நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வில் இருப்பதாகவும் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story