மணமக்களின் தலையை முட்ட வைக்கும் வினோத சடங்கு வழக்கு பதிவு செய்ய மகளிர் ஆணையம் உத்தரவு


மணமக்களின் தலையை முட்ட வைக்கும் வினோத சடங்கு வழக்கு பதிவு செய்ய மகளிர் ஆணையம் உத்தரவு
x

மணமக்களின் தலையை முட்ட வைக்கும் வினோத சடங்கு குறித்து வழக்கு பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு மகளிர் ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது

பாலக்காடு

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் பல்லசேனா கிராமத்தை சேர்ந்தவர் சச்சின். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜலஷா என்பவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

அதன்படி, பல்லசேனாவில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் திருமணம் நடந்தது. பின்னர் உறவினர்கள் மணமக்களை மணமகன் வீட்டிற்கு அழைத்து வந்தனர். அங்கு புகுந்த வீட்டுக்கு செல்வதற்கு முன்னதாக, மணமக்களை வாசல்படி அருகே நிற்குமாறு கூறினர்.

அப்போது உறவினர் ஒருவர் சச்சின், ஜலஷா இருவரது தலையை பிடித்து முட்ட வைத்தார். இதில் வலி தாங்க முடியாமல் மணமகள் அழுதார். அதன் பின்னர் மணமக்களை வீட்டுக்குள் செல்ல அனுமதித்தனர்.

இவ்வாறு செய்வது புகுந்த வீட்டுக்கு வரும் மணமகளின் வாழ்க்கை சிறப்பாக அமையும் என நம்புவதாகவும், அதனால் தான் மணமகளை அழ வைத்து வீட்டுக்குள் அனுப்புகிறோம் என உறவினர்கள் தெரிவித்தனர். அந்த கிராமத்தில் திருமணமான பின்னர் இதுபோன்ற வினோத சடங்கு இருப்பதாக வயதானவர்கள் கூறுகின்றனர். இப்படி ஒரு சம்பிரதாயம் உள்ளது எனக்கே தெரியாது என மணமகன் சச்சின் தெரிவித்தார்.

முதன் முதலாக மணமகன் வீட்டுக்கு வரும் மணமகள் அழுதபடி வருவதால் குடும்பம் நன்றாக இருக்கும் என நம்பப்படுகிறது. ஒரு பிரிவினர் வாதிடுகையில், மற்றொரு பிரிவினர் பாலக்காடு வழக்கம் என்று கூறுகிறார்கள்.

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது இந்த சம்பவம் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதற்குப் பதிலளித்த சச்சின், இதுபோன்ற ஒரு பாரம்பரியத்தை இதுவரை தனது நாட்டில் கேட்டதில்லை. எதிர்பாராத தாக்குதலின் வலியால் கோபமடைந்தேன் அல்லது அதையே செய்த நபருக்கு பதிலளித்திருப்பேன் என்று ஜலஷா கூறினார்.

கேரளாவில் 98 சதவீதம் பேர் படித்தவர்கள். அப்படி இருக்க, 21-ம் நூற்றாண்டிலும் பழைய சம்பிரதாயம் தொடர்ந்து வருவது ஆச்சரியம் அளிக்கிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார், மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விரைவாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க கொல்லங்கோடு போலீசாருக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை செய்து உள்ளது.


Next Story