நவம்பரில் 7.5 கோடி டன் நிலக்கரி உற்பத்தி - கடந்த ஆண்டை விட 11.66 சதவீதம் அதிகரிப்பு
நவம்பர் மாதத்தில் இந்தியாவின் மொத்த நிலக்கரி உற்பத்தி 7.587 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
புதுடெல்லி,
நவம்பர் மாதத்தில் இந்தியாவின் மொத்த நிலக்கரி உற்பத்தி 7.587 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 6.794 கோடி டன்னாக இருந்த நிலக்கரி உற்பத்தி இந்த ஆண்டு 11.66 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நவம்பரில் இந்திய நிலக்கரி நிறுவனத்தின் உற்பத்தி 12.82 சதவீதம் அதிகரித்துள்ளது. சிங்கரேணி காலியரீஸ் நிறுவனம் மற்றும் பிற கேப்டிவ் சுரங்கங்களின் உற்பத்தி முறையே 7.84 சதவீதம் மற்றும் 6.87 சதவீதம் அதிகரித்துள்ளது.
37 சுரங்கங்களில் 24 சுரங்கங்கள் 100 சதவீதத்திற்கும் அதிகமாக உற்பத்தி செய்துள்ளன. மேலும் ஐந்து சுரங்கங்கள் 80 முதல் 100 சதவீதம் வரை உற்பத்தி செய்துள்ளன. கடந்த ஆண்டு நவம்பரில் 6.020 கோடி டன்களாக இருந்த மின் பயன்பாடுகள் இந்த நவம்பரில் 3.55 சதவீதம் அதிகரித்து 6.234 கோடி டன்களாக உள்ளது.