ஜி-20: டிஜிட்டல் இந்தியா நடமாடும் வாகனம்; உ.பி.யில் யோகி ஆதித்யநாத் துவக்கி வைத்தார்...!


ஜி-20: டிஜிட்டல் இந்தியா நடமாடும் வாகனம்; உ.பி.யில் யோகி ஆதித்யநாத் துவக்கி வைத்தார்...!
x

ஜி-20 'டிஜிட்டல் இந்தியா' நடமாடும் வாகனத்தை உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

லக்னோ,

ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அடுத்த ஆண்டு டெல்லியில் ஜி20 நாடுகளின் மாநாட்டை இந்தியா நடத்த உள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் 200 இடங்களில் பல்வேறு தலைப்புகளில் ஜி20 நாடுகள் தொடர்பான கருத்தரங்குகள், கண்காட்சிகள் நடத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

அதன்படி நாடுமுழுவதும் ஜி20 மாநாடுகள், கருத்தரங்குகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்காக ஜி20 உறுப்பு நாடுகள் மற்றும் நட்பு நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் இந்தியா வந்துள்ளனர். அவர்கள் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு தலைப்புகளில் நடக்கும் கருத்தரங்கு, கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.

அந்தவகையில், டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜி-20 பணிக்குழுவின் முதல் கூட்டம் பிப்ரவரி 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, டிஜிட்டல் இந்தியா நடமாடும் வாகனம் லக்னோவுக்கு கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் லக்னோ நகருக்கு வந்தடைந்த வாகனத்தை உத்தரப்பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து இந்த வாகனம் பல்வேறு நகரங்களுக்கும் பயணிக்க உள்ளது.

இந்த வாகனத்தில் பிரதமரின் ஜன் தன் திட்டம், டிஜிலாக்கர், ஆதார், உமாங்க், மின்வழி ரசீது, இ-ஔஷாதி, ஆரோக்கிய சேது, கோவின், இ-ரூபி உள்ளிட்ட டிஜிட்டல் இந்தியாவின் பல்வேறு விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன.


Related Tags :
Next Story