டேராடூனில் குளோரின் வாயுக்கசிவு - பொதுமக்கள் அவசரமாக வெளியேற்றம்


டேராடூனில் குளோரின் வாயுக்கசிவு - பொதுமக்கள் அவசரமாக வெளியேற்றம்
x
தினத்தந்தி 9 Jan 2024 4:21 PM IST (Updated: 9 Jan 2024 5:21 PM IST)
t-max-icont-min-icon

பேரிடர் மீட்புப் படையினர் பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஜாஜ்ரா பகுதியில், திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த குளோரின் சிலிண்டர்களில் இருந்து இன்று காலை வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த வாயு காற்றில் கலந்து அப்பகுதி முழுவதும் பரவியதால் அங்குள்ள மக்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு அவசர அவசரமாக வெளியேறினர்.

இது குறித்து உடனடியாக மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், மத்திய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்கிருந்த மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர். இந்த வாயுக்கசிவு காரணமாக பொதுமக்கள் யாருக்கும் தீவிர பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த 6 குளோரின் சிலிண்டர்களில், 2 சிலிண்டர்களில் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அந்த சிலிண்டர்களை அப்புறப்பத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குளோரின் வாயுவை சுவாதித்தால் கண் எரிச்சல், தலைவலி, சுவாச பிரச்சினைகள் உள்ளிட்டவை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story