சித்ரதுர்கா, கடூரில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.15½ லட்சம் பறிமுதல்


சித்ரதுர்கா, கடூரில்  ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.15½ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 30 April 2023 12:15 AM IST (Updated: 30 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சித்ரதுர்கா, கடூரில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.15½ லட்சம் ரொக்கத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

சிக்கமகளூரு-

சித்ரதுர்கா, கடூரில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.15½ லட்சம் ரொக்கத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

சட்டசபை தேர்தல்

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 10-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடைமுறைகள் அமலில் உள்ளது. வாக்களர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்களை கொடுப்பதை தடுக்க மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் சோதனை செய்து வருகிறார்கள். இதேப்போல் சித்ரதுர்கா மாவட்டத்திலும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் சித்ரதுர்கா மாவட்டம் சல்லகெரே சோதனை சாவடியில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.10½ லட்சம் இருந்தது. இதுகுறித்து காரில் இருந்த பாஸ்கர் ரெட்டியிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் தொழில் சம்பந்தமாக பணத்தை கொண்டு செல்வதாக தெரிவித்தார்.

பறிமுதல்

ஆனால் அதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதையடுத்து ரூ,10½ லட்சம் ரொக்கத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சல்லகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதேபோல் சிக்கமகளூரு மாவட்டம் கடூர் பஸ் நிலையத்தில் அருகே உள்ள சோதனை சாவடியில் ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கமும், மறவஞ்சி சோதனை சாவடியில் ரூ.2½ லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கடூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் தரிகெரே தாலுகா கோடிகேம்ப் பகுதியில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் காரில் இருந்த ரூ.65 ஆயிரம் ரொக்கத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்துள்ளர்.

தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் பொதுமக்கள் கொண்டு செல்லும் பணத்திற்கு ஆவணங்களை எடுத்து செல்ல வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story