ராஜஸ்தானில் இன்று அமைச்சரவை கூட்டம்..!


ராஜஸ்தானில் இன்று அமைச்சரவை கூட்டம்..!
x

ராஜஸ்தானில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட், இளம் தலைவர் சச்சின் பைலட் என இரு தலைவர்களிடையேயான மோதலில் காங்கிரஸ் கட்சி, சிக்கித்தவிக்கிறது. 2018 சட்டசபை தேர்தலுக்குப்பின் முதல்-மந்திரி பதவியை இளம் தலைவர் சச்சின் பைலட் எதிர்பார்த்தார்.

ஆனால் அந்தப் பதவி, கட்சியின் மூத்த தலைவரான அசோக் கெலாட்டுக்கு கிடைத்தது. அதில் இருந்தே அவருடன் சச்சின் பைலட் மோதி வருகிறார். இந்த மோதல் போக்கு, கட்சித்தலைமையின் தலையீட்டால் அவ்வப்போது சற்றே தணிவதும், பின்னர் மீண்டும் அனல் வீசுவதும் தொடர்கிறது.

இந்த நிலையில், இந்த ஆண்டு அங்கு சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில், முந்தைய முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான பா.ஜ.க. அரசின் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த அசோக் கெலாட் அரசை வலியுறுத்தி சச்சின் பைலட் நேற்று ஒரு நாள் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினார். இந்த உண்ணாவிரதப்போராட்டத்தில் ஆளும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வரவில்லை. ஆனால் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையில் ராஜஸ்தான் அமைச்சரவை கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ளது. அரசுக்கு எதிராக சச்சின் பைலட் உண்ணாவிரதம் மேற்கொண்ட நிலையில் இன்று அமைச்சரவை கூடுகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story