மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் ராணுவ அதிகாரி பலி - சத்தீஸ்கர் முதல்-மந்திரி இரங்கல்
மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் லெப்டினல் கர்னல் கபில்தேவ் பாண்டே உயிரிழந்ததற்கு சத்தீஸ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகேல் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ராய்ப்பூர்,
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் நோனே மாவட்டத்தில் துபுல் என்ற இடத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 27 ராணுவ வீரர்கள் உட்பட 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம், துர்க் மாவட்டத்தைச் சேர்ந்த லெப்டினன்ட் கர்னல் கபில்தேவ் பாண்டே மணிப்பூரில் நிலச்சரிவில் உயிரிழந்ததற்கு அம்மாநில முதல்-மந்திரி பூபேஷ் பாகேல் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், "பிலாய் நேரு நகர் பகுதியில் வசிக்கும் லெப்டினன்ட் கர்னல் கபில் தேவ் பாண்டே அவர்கள் வீரமரணம் அடைந்தார் என்ற சோகமான செய்தி கிடைத்தது.
மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் உள்ள ரயில்வே திட்டத்திற்கு பாதுகாப்பை வழங்குவதற்காக, கூர்க்கா ரைபிள்ஸ் பிரிவில் தலைமை தாங்கினார்.
அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் மற்றும் கடவுள் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு பலத்தை அளிக்கட்டும்" இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.