விருந்தினர்களாக வந்துள்ளன: சீட்டாக்களை வனத்தில் திறந்துவிட்ட பிரதமர் மோடி நெகிழ்ச்சி


விருந்தினர்களாக வந்துள்ளன:  சீட்டாக்களை  வனத்தில் திறந்துவிட்ட பிரதமர் மோடி நெகிழ்ச்சி
x
தினத்தந்தி 17 Sept 2022 1:52 PM IST (Updated: 17 Sept 2022 5:10 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் 1952 ஆம் ஆண்டுக்குப் பிறகு முற்றிலும் அழிந்துவிட்ட இனமாக அறிவிக்கப்பட்ட சீட்டாக்கள் மீண்டும் 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்னில் வலம் வரத்தொடங்கியுள்ளன.

நமீபியாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட 3 பெண் சீட்டாக்கள் மற்றும் 5 ஆண் சீட்டாக்கள் என மொத்தம் 8 சீட்டாக்கள் இன்று குனோ தேசிய வனவிலங்கு பூங்காவில் திறந்துவிடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது: சீட்டாக்களை மீண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்யும் திட்டத்திற்கு உதவிய நமீபியா அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

உலகில் வேகமாக ஓடக்கூடிய இந்த சீட்டாக்களை பார்ப்பதற்கு மக்கள் இன்னும் கொஞ்ச காலம் பொறுமையாக காத்திருக்க வேண்டும். இந்த சீட்டாக்கள் குனோ தேசிய பூங்காவிற்கு இன்று நமது விருந்தாளிகளாக வந்துள்ளன. விரைவில் அவை இதனைத் தங்களுது வீடாக மாற்றிக்கொள்ள நாம் அவகாசம் கொடுக்க வேண்டும்" என்றார்.


Next Story